மகளிர் ஆசிய கோப்பை 2024 - வரலாற்றில் முதல் வீராங்கனை என்ற புதிய சாதனை படைத்த சமாரி அத்தபத்து!!மகளிர் ஆசிய கோப்பை 2024 - வரலாற்றில் முதல் வீராங்கனை என்ற புதிய சாதனை படைத்த சமாரி அத்தபத்து!!

Sri Lanka vs Malaysia: மகளிர் ஆசிய கோப்பை 2024: தற்போது ஆண்கள் விளையாடு கிரிக்கெட் போட்டிக்கு இருக்கும் வரவேற்பு பெண்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டிக்கும் இருந்து வருகிறது என்று சொல்லாம். அந்த அளவுக்கு ரசிகர்கள் மகளிர் கிரிக்கெட் போட்டிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இப்பொழுது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நேற்று இலங்கை – மலேசியா அணிகள்  நேருக்கு நேர் மோதின. ஒரு நாள் லீக் போட்டியில் களமிறங்கிய இரண்டு அணிகளும் வெற்றி நாமத்தை சூட வேண்டும் என்று தீவிரமாக விளையாடினர். இதில் ஆட்டத்தின் முதல் பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் குவித்தது. Female Cricket

குறிப்பாக இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு வரலாற்று சாதனையும் படைத்தார்.

அதாவது இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து 62 பந்துகளில் 119 ரன்கள் குவித்து புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். women cricket news

Also Read: ராஜஸ்தான் அணியில் சேரும் ராகுல் டிராவிட்? – 2012ல் விட்டதை இப்போது பிடிப்பாரா?

இன்னும் சொல்ல போனால் மகளிர் ஆசிய கோப்பை வரலாற்றில் சதம் அடித்த முதல் வீராங்கனை இவர் தான். அதுக்கப்புறம் களமிறங்கிய மலேசியா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 40 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. எனவே இலங்கை அணி 144 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. women’s asia cup

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *