மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: சமீபத்தில் ஆண்களுக்கான T20 உலக கோப்பை போட்டி நடைபெற்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்களுக்கு பிறகு அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து மகளிர் 20 ஓவர் உலக கோப்பை வருகிற அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதன்படி முதல் போட்டி வங்கதேசம் – ஸ்காட்லாந்து அணிகள் ஷார்ஜாவில் மோதுகின்றன.
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024
அதே போல் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் – இந்திய அணிகள் வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. முன்னதாக இந்த தொடர் வங்கதேசத்தில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் வங்கதேசத்தில் நிலவரம் அசாதாரண சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.
மேலும் இந்த டி20 உலகக்கோப்பை 2024 ல் மொத்தம் 23 ஆட்டங்கள் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்தும் துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறுகின்றன. இது தொடர்பான அறிவிப்பை கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு அணிகளும் தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
Also Read: தமிழக மக்கள் கவனத்திற்கு – ஆதார் கார்டு புதுப்பிக்க செப்.14 தான் கடைசி – ஆதார் ஆணையம் அறிவிப்பு
அந்த வகையில் தற்போது மகளிர் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. Women’s T20 World Cup 2024
அதாவது விரைவில் நடக்க இருக்கும் மகளிர் டி20 உலக கோப்பை தொடருக்காக ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. Women’s cricket
மகளிர் இந்திய அணி வீரர்கள்:
ஹர்மன்பிரீத் கவுர்(C), மந்தனா, வெர்மா, ஷர்மா, ரோட்ரிஜியூஸ், கோஸ்(wk), பாட்டியா(wk), வஸ்திரகர், ரெட்டி, சிங் தாகூர், ஹேமலதா, ஷோபனா, யாதவ், பாட்டில், சஜீவன்.
திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி
விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்?
ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார்