உலகக்கோப்பை கிரிக்கெட்  2023 இன்னும் 14நாட்களில்உலகக்கோப்பை கிரிக்கெட்  2023 இன்னும் 14நாட்களில்

   கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலாய் எதிர்பார்த்துக் கத்துக்கொண்டிருந்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2023 இன்னும் 14நாட்களில் தொடங்க இருக்கின்றது. தற்போது நடக்க இருப்பது 13வது உலகக்கோப்பை தொடர். ஆனால் முதலாவது உலகக்கோப்பையில் நடந்தது என்ன என்பது குறித்து அறிந்து கொள்வோம்.

உலகக்கோப்பை கிரிக்கெட்  2023 இன்னும் 14நாட்களில் !

உலகக்கோப்பை கிரிக்கெட்  2023 இன்னும் 14நாட்களில்

13வது கிரிக்கெட் உலகக்கோப்பை :

   சர்வதேச கிரிக்கெட் சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆகும். அதன் படி இந்த ஆண்டு 13வது கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியானது வருகின்ற அக்டோபர் 5ம் தேதி இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் இந்தியாவில் இருக்கின்ற நரேந்திரமோடி மைதானத்தில் வைத்து மோத இருக்கின்றனர். இந்த தொடரில் மொத்தம் 10அணிகள் கலந்து கொண்டு 48 போட்டிகள் நடைபெற இருக்கின்றது. 13வது உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியானது நவம்பர் 19ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.

போட்டி நடைபெறும் இடம் :

  1. அகமதாபாத் ( 5 போட்டிகள் ) – நரேந்திர மோடி மைதானம் 

  2. பெங்களூர் ( 5 போட்டிகள் ) – எம்.சின்னசாமி மைதானம் 

  3. சென்னை ( 5 போட்டிகள் ) – எம்.ஏ சிதம்பரம் மைதானம்   

  4. டெல்லி ( 5 போட்டிகள்  ) – அருண் ஜெட்லி

  5. தர்மசாலா ( 5 போட்டிகள் ) – HPCA மைதானம் 

  6. ஹைதராபாத் ( 3 போட்டிகள் ) – ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம் 

  7. கொல்கத்தா ( 5 போட்டிகள் ) – ஈடன் கார்டன்ஸ் 

  8. லக்னோ ( 5 போட்டிகள் ) – BRS ABV ஏகானா கிரிக்கெட் மைதானம் 

  9. மும்பை ( 5 போட்டிகள் ) – வான்கடே மைதானம் 

10. புனே ( 5 போட்டிகள் ) – மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம் 

எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திட இங்கே கிளிக் செய்யவும்

இந்தியாயுடன் மோதும் அணிகள் :

  1. 08.10.2023 – ஆஸ்திரேலியா & இந்தியா – ( சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானம் ) 

  2. 11.10.2023 – ஆப்கானிஸ்தான் & இந்தியா – ( டெல்லி அருண் ஜெட்லி மைதானம் )

  3. 14.10.2023 – இந்தியா & பாகிஸ்தான் – ( அகமதாபாத் நரேந்திரமோடி மைதானம் )

  4. 19.10.2023 – பங்களாதேஷ் & இந்தியா – ( புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம் )

  5. 22.10.2023 – இந்தியா & நியூசிலாந்து – ( தர்மசாலா HPCA மைதானம் )

  6. 29.10.2023 – இந்தியா & இங்கிலாந்து – ( லக்னோ BRS ABV ஏகானா கிரிக்கெட் மைதானம் )

  7. 02.11.2023 – இந்தியா & இலங்கை – ( வான்கடே மைதானம் )

  8. 05.11.2023 – தென்னாபிக்கா & இந்தியா – ( கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் )

  9. 12.11.2023 – நெதர்லாந்து & இந்தியா – ( பெங்களூர் எம்.சின்னசாமி மைதானம் ) 

நிபா வைரஸ் பரவல் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும்  மருந்து  ! மீண்டும் லாக்டவுன் !

அரையிறுதி போட்டிகள் :

 1. 15.11.2023 – மும்பை வான்கடே மைதானம் 

 2. 16.11.2023 – கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானம் 

இறுதி போட்டி :

1. 19.11.2023 – அகமதாபாத் நரேந்திரமோடி மைதானம் 

உலகக்கோப்பை வெற்றியாளர்கள் :

 1. 1975 – வேஸ்ட் இண்டிஸ் 

 2. 1979 – வேஸ்ட் இண்டிஸ் 

 3. 1983 – இந்தியா 

 4. 1987 – ஆஸ்திரேலியா 

 5. 1992 – பாகிஸ்தான் 

 6. 1996 – இலங்கை 

 7. 1999 – ஆஸ்திரேலியா 

 8. 2003 – ஆஸ்திரேலியா 

 9. 2007 – ஆஸ்திரேலியா 

10. 2011 – இந்தியா 

11. 2015 – ஆஸ்திரேலியா 

12. 2019 – இங்கிலாந்து 

உலகக்கோப்பை உருவாகக்காரணம் :

   சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியானது 1971ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டது. போட்டியானது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மெல்போர்னில் மைதானத்தில்  நடைபெற இருந்தது. ஆனால் மழையின் காரணமாக போட்டி நடைபெறவில்லை. இதனால் மெல்போர்னில் கிரிக்கெட் சங்கத்திற்கு அதிகளவு வருவாய் இழப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் 40 ஓவர் கொண்ட முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியானது நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வி அடைந்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு மக்கள் கொடுத்த ஆதரவின் காரணமாகவே 1975ல் முதல் உலகக்கோப்பை தொடர் தொடங்கப்பட்டது. 

முதல் உலகக்கோப்பை :

  1975ல் ஜூன் 7 முதல் 21ம் தேதி வரையில் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்றது. 60 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் கிரிக்கெட் வீரர்கள் வெள்ளை உடை அணிந்து சிவப்பு நிற பந்துடன் விளையாடினர். நியூசிலாந்து , கிழக்கு ஆப்பிரிக்கா , இந்தியா , இங்கிலாந்து போன்ற அணிகள் ‘B’ பிரிவில் விளையாடினர். அதே போல் ‘A’ பிரிவில் வேஸ்ட் இண்டீஸ் , ஆஸ்திரேலியா , இலங்கை , பாகிஸ்தான் அணிகள் விளையாடினர். வெஸ்ட் இண்டிஸ் அணியும் ஆஸ்திரேலியா அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 60 ஓவர் கொண்ட இறுதி போட்டியில் வெட்ஸ் இண்டிஸ் அணி 8 விக்கெட் இழந்து 291 ரன்கள் எடுத்து இருந்தனர். அதே சமயம் ஆஸ்திரேலியா அணி 58.4 ஓவரில் 274 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டி வெற்றி அணியானது வெட்ஸ் இண்டிஸ் அணியின் கேப்டன் கிளைவ் லாயிட் 102 ரன்கள் எடுத்தது இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை கிரிக்கெட்  2023 இன்னும் 14நாட்களில்

2023 உலகக்கோப்பை ஒளிபரப்பு :

  கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டிடி ஸ்போர்ட்ஸ் மேலும் பிரபல OTT தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்றவைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்ட உள்ளது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் ஆண்டுகள் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு மிகப்பெரியதாக இருக்கும். அதே ஆரவாரத்துடன் தான் இந்த ஆண்டும் இந்தியாவை தலைமை இடமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இதனால் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து தான் உள்ளது. போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் 14 நாட்கள் தான் இருக்கின்றது. ஆனால் தற்போது ரசிகர்களால் கிரிக்கெட் வீரர்கள் கொண்டாடப்பட்டு வருகின்றனர். பொருந்திருந்து பார்க்கலாம் எந்த அணி வெற்றி பெறுகின்றது என்று. 

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *