2023 உலக கோப்பை. இறுதிப்போட்டி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. 6 வது முறையாக 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. சாம்பியன்நா நாங்க தான் என்று மீண்டும் நிரூபித்தது.
2023 உலக கோப்பை ! ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி !
இந்தியா
ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 3 சிக்ஸர் அடித்தார். கில் நான்கு ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கோலி அரைசதம் கடந்தார். ஸ்ரெயர்ஸ் ஐயர் நான்கு ரங்களில் விக்கெட்டை இழந்து வந்த வேகத்தில் திரும்பினார். மைதானம் முழுவதும் நீல நிறங்களால் மட்டுமே காட்சியளித்தது.
அகமதாபாத்
இந்தியாவின் முக்கிய விஐபிகள் இன்றைய போட்டியை காண வந்தனர். அகமதாபாத் மைதானம் முழுமையான பாதுகாப்பு வளையத்தில் இருந்தது. பின்னர் சீரிய இடைவெளியில் விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தது. ஆனால் கே எல் ராகுல் மட்டும் நிலைத்து நின்று ஆடினார்.
240 ரன்கள் மட்டுமே
ஜடஜா ஒன்பது ரன்களில் அவுட் ஆனார். சூரியகுமார் யாதவ் 18 ரன்னில் வீழ்ந்தார். இதுவரை சூர்யா எந்த போட்டியிலும் அடிக்கவில்லை. இன்றும் அது தொடர்ந்தது. இந்தியாவின் இறுதி நம்பிக்கையும் தகர்ந்தது. பவுலர்கள் வந்த வேகத்தில் நடை கட்டினர். இதனால் இந்தியா 250 ரன்கள் கூட எட்ட முடியவில்லை. 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
TNPSC GROUP 4 இலவச பயிற்சி ! YOUTUBE ஆன்லைன் வகுப்பு !
ஆஸ்திரேலியா வெற்றி
241 ரன்கள் இலக்காக கொண்டு ஆடி ஆஸ்திரேலியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். மிச்சல் மார்ஸ் 15 ரன்கள் ஆட்டம் இழந்தார். மார்ஷ் லபுஷன் மற்றும் ஹெட் அணியை மீட்டனர். டிராவிஸ் ஹெட் 137 ரன்கள் விலாசினார். 43 ஓவர்களில் ஆஸ்திரேலியா 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டனாயனாக டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார்.
2023 உலக கோப்பையின் சில துளிகள்
அதிக ரன்கள் விராட் கோலி 765.
ஒரு போட்டியில் அதிக ரன் மேக்ஸ்வெல் 21.
அதிக சதம் குவிண்டன் டீ காக் நான்கு.
சிக்ஸர்கள் ரோகித் சர்மா 31.
அதிக விக்கெட் மொஹமட் சனி 24.
அதிக கேட்ச் டார்லி மிச்சல் 11.