அதிவேக இன்டர்நெட் சேவை வழங்கும் டாப் நாடுகள் பட்டியல் - இந்தியா எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?அதிவேக இன்டர்நெட் சேவை வழங்கும் டாப் நாடுகள் பட்டியல் - இந்தியா எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

அதிவேக இன்டர்நெட் சேவை வழங்கும் டாப் நாடுகள் பட்டியல்: தற்போது இருக்கும் டிஜிட்டல் உலகத்தில் கையில் ஆண்ட்ராய்டு மொபைல் போன் இல்லாத ஆட்களை பார்க்க முடியாது.

அதன்படி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் மூழ்கியுள்ளனர். ஏன் அந்த மொபைலை வைத்து நமக்கு தினசரி தேவைப்படும் பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவதில் இருந்து பண பரிவர்த்தனை செய்வதற்கு வரை பல இடங்களிலும் இணைய சேவை  வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சேவை என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் வேற வேற மாறி அமைகிறது.

அதிவேக இன்டர்நெட் சேவை வழங்கும் டாப் நாடுகள் பட்டியல்

அந்த வகையில் உலகின் அதிவேக இன்டர்நெட் சேவைகளை அளிக்கும் நாடுகளின் பட்டியல் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பொதுவாக இணைய சேவையை நாம் இரண்டு வழிகளாக பிரிக்கலாம். ஒன்று மொபைல் வழி சேவை, இன்னொன்று ராட்பேண்ட் சேவை.

எனவே இந்த இரண்டு வழி சேவைகளில் எந்தெந்த நாடுகள் அதிவேக இன்டர்நெட் சேவைகளை அளித்துள்ளது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

பிராட்பேண்ட் சேவை:

பிராட்பேண்ட் சேவையை பொறுத்தவரை 261.8 Mbps அளவில் இணைய சேவையை கொடுத்து மொனாக்கோ நாடு முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து சிங்கப்பூர் 255.83 Mbps அளவில் இணைய சேவையை கொடுத்து 2ம் இடத்தில் இருந்து வருகிறது. அதன் பின்னர் ஹாங்காங் ( 254.70 Mbps) 3 வது இடத்திலும், ரோமானியா (232.17 Mbps) 4வது இடத்திலும், சுவிட்சர்லாந்து (229.96 Mbps) 5வது இடத்திலும் இருந்து வருகிறது. அது போக 6வது இடத்தில் டென்மார்க் ( 227.91 Mbps) நாடும், 7 வது இடத்தில்  தாய்லாந்து ( 225.17 Mbps) நாடும், 8வது இடத்தில் சிலி ( 217.60 Mbps) நாடும், 9வது இடத்தில் பிரான்ஸ் (214.04 Mbps) நாடும் இருந்து வருகிறது. கடைசியாக 10வது இடத்தில் தென்கொரியா(212.57 Mbps) உள்ளது.

Also Read: காலியான இடத்தில் லோன் வாங்க வேண்டுமா? அப்ப இந்த ஆவணங்கள கரெக்டா எடுத்து வச்சுக்கோங்க!!

மொபைல் வழி சேவை:

அதே போல் பிராட்பேண்ட் சேவையை பொறுத்தவரை ஐக்கிய அரபு நாடுகள் 269.41 Mbps அளவில் இணைய சேவையை கொடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதையடுத்து கத்தார் 206.80 Mbps அளவில் இணைய சேவையை கொடுத்து 2ம் இடத்தில் இருந்து வருகிறது. world internet

அதன் பின்னர் குவைத் ( 191.74 Mbps) 3 வது இடத்திலும், சீனா (164.14 Mbps) 4வது இடத்திலும், மக்காவு (155.75 Mbps) 5வது இடத்திலும் இருந்து வருகிறது.

அது போக 6வது இடத்தில் நார்வே ( 146.02 Mbps) நாடும், 7 வது இடத்தில்  தென்கொரியா ( 145.25 Mbps) நாடும், 8வது இடத்தில் டென்மார்க் ( 143.63 Mbps) நாடும் இருந்து வருகிறது.

கடைசியாக 9வது இடத்தில் பல்கெரியா (142.07 Mbps) உள்ளது. world fastest internet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *