மிகப்பெரிய சிவன் கோவில்
உலகில் ஏராளமான கடவுள்கள் இருந்தாலும், மக்கள் அதிகமாக வழிபடும் தெய்வம் என்றால் அது சிவபெருமான் தான். முன்னோர் காலத்தில் சிவனை ஒரு பக்கம் வழிபட்டார்கள் என்றால் இன்னொரு பக்கம் பெருமாளை வழிபட்டு வந்தார்கள். ஆனால் அப்போதும் மக்கள் அதிகமாக நேசித்த கடவுள் என்றால் அது சிவபெருமான் தான். சிவன் மீது இருந்த ஈர்ப்பால் பல ராஜாக்கள் அப்போதே சிவனுக்கு பல கோவில்கள் கட்டிய வழிபட்டு வந்தனர். இந்நிலையில் உலகிலேயே மிகவும் உயரமான சிவன் கோவில் எங்குள்ளது தெரியுமா? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் பகுதியில் தான் துங்கநாத் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவில் தான் உலகின் மிக உயரமான சிவன் கோயில் என்ற பெருமையை பெற்றுள்ளது. அதாவது இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 12,073 அடி( 3,680 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சிலர் ஆகாய தலமாக குறிப்பிடுகின்றனர்.
இந்த கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும் என்றால், சோப்தா என்ற பகுதியில் இருந்து 3.5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு மலைப்பாதை வழியாக சென்றால் இந்த கோவிலை அடையலாம். அதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், அந்த மலை பாதையில் செல்லும் போது பசுமையான புல்வெளிகள், அடர்ந்த காடுகள் மற்றும் பனி மூடிய சிகரங்கள் என ஒட்டுமொத்த இயற்கை அழகை அங்கு பார்க்கலாம். இந்த கோவிலை வயதானவர்கள் முதல் சிறியவர்கள் வரை எந்தவித இடர்பாடுகள் இன்றி கண்டு களிக்கலாம் என கூறப்படுகிறது.