பணம் இல்லாமல் தவிக்கும் அமெரிக்காபணம் இல்லாமல் தவிக்கும் அமெரிக்கா

பணம் இல்லாமல் தவிக்கும் அமெரிக்கா. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடு அமெரிக்கா. ஆனால் அந்த அமெரிக்காவிற்கே இப்போ இந்த நிலைமை. பொதுப் பணி செய்வதற்கு நிதி இல்லாமல் திண்டாடி வருகிறது. இதனால் அரசு முடங்கும் அபாயமும் உள்ளது.

பணம் இல்லாமல் தவிக்கும் அமெரிக்கா ! அரசு முடங்கும் அபாயம் !

பணம் இல்லாமல் தவிக்கும் அமெரிக்கா

அமெரிக்காவில் பொதுப்பணிகளுக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்குவது வழக்கம். நிதி ஒதுக்கும் முன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூட்டப்படும். அங்கு நிதி அளிக்க மசோதா நிறைவேற்றப்படும். பின்னர் ஜனாதிபதியிடம் ஒப்புதல் கையெழுத்து பெறப்படும். அதன் பிறகு பொதுப்பணிகளுக்கான நிதி ஒதுக்கப்படும்.

JOIN WHATSAPPCLICK HERE

இந்த நிலையில் குடியரசு கட்சியினர் மசோதாவை முடக்கினர். அதற்குக் காரணம் மிகப்பெரிய செலவினங்கள் என்று கருதினர். உதாரணமாக உக்ரைன் போர். அது போன்ற பெறிய செலவுகளை செய்யக்கூடாது என்று கூறினர். அதை குறைத்தால் மட்டுமே மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்போம் என்றனர்.

இந்த நிலையில் ஏற்கனவே ஒதுக்கிய நிதி காலியானது. இதனால் பொதுப்பணிகளை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அரசு முடங்கும் அபாயம் உள்ளது. அப்படி அரசு முடங்கினால் அமெரிக்காவின் அனைத்து நிறுவனங்களையும் அது பாதிக்கும். அரசு அலுவலகங்கள் மூடப்படும். அரசுத் திட்டங்கள் முடங்கும். அரசு பணியாளர்களுக்கு சம்பளம் கிடைக்காது. இதனால் அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் பணியாற்றுவர். பல லட்சம் பேர் வேலை இழப்பர்.

மூதாட்டிக்கு தவறுதலாக வந்த ரூ. 17 லட்சம் ! இந்தியன் வங்கியின் அலட்சியம் ! 

இவையெல்லாம் நடந்தால் அமெரிக்கா மட்டுமல்ல உலக நாடுகளும் பாதிக்கப்படும். இந்த பாதிப்பு மற்ற நாடுகளின் பொருளாதார சந்தையில் எதிரொலிக்கும். ஆனால் அமெரிக்கா அரசு முடங்குவது புதிதல்ல. நான்கு முறை இவ்வாறு நடந்துள்ளது. ஆனால் வல்லரசு நாடாச்சே. விரைவில் அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்தனர். இந்த முறையும் நிச்சயம் சரி செய்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *