Home » பொது » இன்ஸ்டா மூலம் 895 கோடி சம்பாதித்த நளா பூனை – அடேங்கப்பா ஒரு ரீல்ஸ்க்கு ரூ.12 லட்சமாம்!

இன்ஸ்டா மூலம் 895 கோடி சம்பாதித்த நளா பூனை – அடேங்கப்பா ஒரு ரீல்ஸ்க்கு ரூ.12 லட்சமாம்!

இன்ஸ்டா மூலம் 895 கோடி சம்பாதித்த நளா பூனை - அடேங்கப்பா ஒரு ரீல்ஸ்க்கு ரூ.12 லட்சமாம்!

இன்ஸ்டா மூலம் 895 கோடி சம்பாதித்த நளா பூனை: இன்றைய நவீன காலகட்டத்தில் சினிமாவுக்காக வாய்ப்பு தேடும் பல பேர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக வாய்ப்பு தேடி வருகின்றனர். அதில் சிலர் படத்தில் நடிக்கும் அளவுக்கு உயரந்துள்ளனர். அதுமட்டுமின்றி இன்ஸ்டா மூலம் பெரும்பாலான மக்கள் பணம் சம்பாதித்து வருகின்றனர்.

இன்ஸ்டா மூலம் 895 கோடி சம்பாதித்த நளா பூனை

தங்களின் திறமைகளை வெளிக்காட்டி மக்களை இந்த இன்ஸ்டா மூலம் கவர்ந்து வருகின்றனர். ஏன் மனிதர்கள் மட்டுமா? விலங்குகளும் இதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுவும் பல கோடி சம்பாதித்து உள்ளது என்று சொன்னால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஆனால் இது 100 சதவீதம் உண்மையான ஒன்று.

அட ஆமாங்க, வாரிசிரி மாதச்சிட்டிபன் என்பவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் செல்லப்பிராணி விற்பனை மையத்தில் இருந்து சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பூனை குட்டியை வாங்கியுள்ளார். அந்த பூனை குட்டிக்கு நளா என்று பெயர் வைத்தார். இதனை தொடர்ந்து அந்த பூனையின் சுட்டி தனத்தை பார்த்து கடந்த 2012ம் ஆண்டு நளா கேட் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கை திறந்து பூனையை தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். nala cat

அந்த பூனையின் குறும்பு தனத்தை பார்த்து இன்ஸ்டகிராமில் பாலோயர்களின் எண்ணிக்கை 4.5 மில்லியனுக்கும் அதிகமானது. மேலும், இந்த இன்ஸ்டகிராம் மூலம் அந்த நளா பூனைக்குட்டி இதுவரை 84 மில்லியன் பவுண்டுகள் சம்பாதித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.895 கோடியை சம்பாதித்து உள்ளது. குறிப்பாக அவருடைய ஒரு வீடியோவுக்கு மட்டும் ரூ.12 லட்சமாம். world richest cat

Also Read: உங்களுக்கு பேன் தொல்லை அதிகமாக இருக்கா? அதிலிருந்து விடுபட இதை செய்யுங்கள்!

அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் அதிகம் பின் தொடரும் பூனை என்ற  கின்னஸ் உலக சாதனையையும் நளா படைத்துள்ளது. குறிப்பாக ஆண்டின் டிக்டோக்கர் பட்டத்தையும் வென்றுள்ளது. இதுகுறித்து பேசிய உரிமையாளர், “நளாவை நான் வளர்க்கத் ஆரம்பித்ததில் இருந்து,அதை வீடியோ எடுத்து சமூக ஊடக கணக்குகளை நிர்வகிப்பதே தனது முழு நேர வேலையாக மாறிவிட்டது.

இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?

மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்

டீ குடித்தால் தலைவலி நீங்குமா?

விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்

முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top