உலகின் முதல் SMS: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே அட்வான்ஸாக போய் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் நமக்கு தேவையானதை தேடி சென்று வாங்குகிறோம். ஆனால் நமக்கு தேவையான எல்லாவற்றையும் இணைய வழியை பயன்படுத்தி பெற்றுக் கொள்கிறோம். குறிப்பாக சொல்லப்போனால் வங்கி சேவைகள் முதல் பள்ளி வகுப்புகள் வரை எல்லாமே ஆன்லைன் மையமாக மாறிவிட்டது. மேலும் குறுஞ்செய்தியை பரிமாற எத்தனையோ செயலிகள் வந்துள்ளது.
குறிப்பாக வாட்சப்பில் தான் பெரும்பாலான மக்கள் மூழ்கி இருக்கின்றனர். ஆனால் கடந்த 10 -15 ஆண்டுகளுக்கு முன்பு வரை எஸ்.எம்.எஸ் தான் உலகை ஆண்டு கொண்டிருந்தது. தற்போதுள்ள சாட் என்கிற வசதிக்கு மூலதனமே இந்த எஸ்.எம்.எஸ் (SMS) வசதி தான். ஆனால் பல பேருக்கு உலகில் முதன் முதலில் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ் எது என்று தெரியாது. இது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகின் முதல் SMS எது தெரியுமா? யாருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்!
வோடோபோன் நிறுவனம் தான் முதன்முதலில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த எஸ்.எம்.எஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நெயில் பப்புவோர்த் என்பவர் தன்னுடைய கணினி மூலமாக ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவருக்கு ‘மேர்ரி கிறிஸ்துமஸ்’ (‘Merry Christmas’) என்ற எஸ்.எம்.எஸ்-யை முதன் முதலில் அனுப்பி உள்ளார்.
2024ன் சிறந்த வார்த்தை “Brain Rot” : ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி அதிரடி அறிவிப்பு!
வோடோபோன் நிறுவனத்தின் அப்போதைய தலைமை அதிகாரி தான் இந்த ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1992 ஆம் ஆண்டு சுமார் 14 கேரக்டர்களை கொண்ட ஆர்பிட்டால் 901 மொபைலுக்கு தான் அனுப்பியுள்ளார். NFT ஏலத்தில் $750,000க்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்