தற்போது வினேஷ் போகத் – பஜ்ரங் புனியா காங்கிரசில் இணைந்தனர் ரயில்வே பதவியை ராஜினாமா செய்தார் வினேஷ் போகத், இது தொடர்பாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஹரியானா :
ஹரியானாவில் தற்போது முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 5ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
அக் 8ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள 66 வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் மேலிடம் இறுதி செய்து விட்டது.
இதையடுத்து இந்த தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று முடிவு செய்துள்ள காங்கிரஸ் கட்சி, பாஜகவுக்கு எதிரான பல பிரபலங்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ், முன்னாள் வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கிடைத்துள்ளனர்.
ராகுல் காந்தியுடன் சந்திப்பு :
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின்பேரில் சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் டில்லியில் சந்தித்து பேசினர்.
அப்போதிலிருந்தே இருவருக்கும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்களின் பட்டியல் – 2வது இடத்தில் நடிகர் விஜய் !
ரயில்வே பதவி ராஜினாமா :
தற்போது மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது ரயில்வே பணியை ராஜிமானா செய்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்திய ரயில்வேயில் சேவையாற்றியது என் வாழ்வில் மறக்கமுடியாத மற்றும் பெருமையான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ரயில்வே துறையில் இருந்து விலகி கொள்ள முடிவு செய்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ராஜினாமா கடிதத்தை இந்திய ரயில்வேயின் திறமையான அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளேன்.
மேலும் தேசத்திற்கு சேவை செய்ய ரயில்வே எனக்கு வழங்கிய இந்த வாய்ப்பிற்காக, இந்திய ரயில்வே குடும்பத்தினருக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
வினேஷ் போகத் & பஜ்ரங் புனியா காங்கிரசில் இணைந்தனர் :
தற்போது மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் & பஜ்ரங் புனியா ஆகியோர் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஹரியானா சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இணைத்தனர்.
இதற்க்கு முன்னதாக வினேஷ் போகத் & பஜ்ரங் புனியா ஆகியோர் தங்களது ரயில்வே பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.