இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ICC நிர்வாகம் ENG – NZ அணிகளுக்கு 3 புள்ளி குறைப்பு செய்த விஷயம் அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
World Test Championship 2025:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. லண்டன் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. மேலும் இந்த பைனலுக்கு செல்ல இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 5 அணிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. மேலும் ஒவ்வொரு அணிக்கும் இன்னும் 4 அல்லது 5 போட்டிகளே மீதமுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு போட்டியின் வெற்றி தோல்வியும் புள்ளிப் பட்டியலை தலைகீழாக மாறி வருகின்றனர். இந்தியாவை நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளும் வென்று ஒயிட்வாஷ் செய்தது. இதனால் நியூசிலாந்து பைனலுக்கு செல்லும் வாய்ப்பை பலப்படுத்தியது. இதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகளில் நியூசிலாந்து விளையாடி வருகிறது.
ENG – NZ அணிகளுக்கு 3 புள்ளி குறைப்பு – நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு செல்லுமா?
சென்னை Airport-ல் பார்க்கிங் கட்டணம் உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
இந்நிலையில், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தாமதமாக ஓவர்களை வீசியதாக கூறி ஐசிசி இரு அணிகளின் புள்ளிகளையும் குறைத்து இருக்கிறது. அதாவது 2 அணிகளும் மூன்று ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக கூறி 3 WTC புள்ளிகள் குறைத்து பெனால்டி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை முற்றிலும் இழந்து விட்டது என்று கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்