
ஜெராக்ஸ் மெஷின் : நம் அன்றாட வாழ்வில் நகல் எனப்படும் ஜெராக்ஸ் காப்பி எடுக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த ஜெராக்ஸ் மெஷினை கண்டுபிடித்தவர் யார்? அது கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னணி என்ன? போன்ற பல பயனுள்ள தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜெராக்ஸ் மெஷின்
நாம் எல்லோரும் தற்போது அவசரகால உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதில் இந்த ஜெராக்ஸ் மெஷினின் பங்கு மிகவும் இன்றியமையாதது. சிறிய வணிக நிறுவனங்கள் முதல் பெரிய கார்பொரேட் நிறுவனங்கள் வரை ஜெராக்ஸ் மெஷினை பயன்படுத்தாதவர் யாரும் இருக்க முடியாது. படித்தவர்கள், படிக்காதவர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் இந்த ஜெராக்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இந்த ஜெராக்ஸ் மெஷினை கண்டுபிடித்தவர் செஸ்டர் கார்ல்சன் என்பவர். இவர் 1906 ம் வருடம் பிப்ரவரி 8 ம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் பள்ளியில் படித்துக்கொண்டே பகுதி நேர வேலை செய்து வந்தார். அதில் வரும் வருமானத்தை குடும்பத்திற்கும் கொடுத்து வந்தார்.கலிபோர்னியா தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்து பயின்று இயற்பியல் பாடப்பிரிவில் பட்டம் வென்றார்.பின்னர் 1936 ல் நியூயார்க் சட்டக்கல்லூரியில் இரவு நேர மாணவனாக சேர்ந்தார்.
அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம் ! குழந்தை இல்லாத ஏழை மக்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட் !
அச்சமயம் சட்ட புத்தகங்கள் வாங்க அவரிடம் பணம் இல்லை. அதனால் நூலகத்தில் புத்தகங்களை கடன் வாங்கி கை வலிக்க எழுதினார். அந்த நேரத்தில் அவருக்கு தோன்றியது தான் இந்த ஜெராக்ஸ் மெஷின் கண்டுபிடிப்பு. அதனால் தனது வீட்டு சமையல் அறையை ஆய்வகமாக்கி பல முயற்சிகளை முன்னெடுத்தார்.1938 அக்டோபர் 22 ந் தேதி செஸ்டர் கார்ல்சன் வாழ்வில் ஒரு திருப்புமுனை தினமாக அமைந்தது.அன்று தான் அவர் ஜெராக்ஸ் மெஷினின் அடிப்படையை உணர்ந்தார்.
ஒரு இருட்டான அறையில் இந்தியன் மை, கந்தகம், லைகோபோடியம்,மெழுகு போன்றவற்றை கொண்டு ஆராய்ந்து நிறைய மாதிரிகளை சேகரித்தார். உதாரணத்திற்கு மெழுகு தடவிய ஒரு காகிதத்தை கந்தகம் பூசிய ஒரு இடத்தின் மேல் வைத்து லைகோபோடியம் தூள் பதிந்திருந்த இடத்தில் காணப்பட்ட எழுத்துக்களையும், எண்களையும் பதித்து எடுத்தார்.பின்னர் லேசாக அந்த தாளை சூடாக்கினார். லைகோபோடியம் தூள் பதிந்திருந்த இடத்தை தவிர மற்ற இடங்களில் காணப்பட்ட மெழுகு உருகி, அந்த தாளில் எழுத்துக்களும், எண்களும் காணப்பட்டன.
இதை மெஷினாக தயாரித்து விற்க 21 வருடங்கள் ஆகியதாம். 1944 ல் பாட்டில்லி நினைவு நிறுவனம் செஸ்டரின் கண்டுபிடிப்பின் சிறப்பை உணர்ந்து ராயல்டி முறையில் அதை தயாரிக்க உதவியது. பின்னர் 1947 ல் பாட்டில்லி நிறுவனம் ஜெராக்ஸ் என்று அழைக்கப்பட்ட ஹலாய்டு நிறுவனத்திடம் இந்த உரிமத்தை வழங்கியது. இருப்பினும் 1959 ம் ஆண்டில் தான் முதல் ஜெராக்ஸ் இயந்திரம் விற்பனைக்கு வந்தது. இதன் மூலம் மிகப்பெரிய செல்வந்தர் ஆன செஸ்டர் அவர்கள் 1968 செப்டம்பர் 19 ல் தனது 62 வது வயதில் காலமானார்.