சென்னையில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மையங்கள்: கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரஸில் இருந்து தற்போது தான் மக்கள் பழைய வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், தற்போது புதிதாக ஒரு காய்ச்சல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதாவது மஞ்சள் காய்ச்சல் எனப்படும் வைரஸ் காய்ச்சல் இப்பொழுது ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, மஞ்சள் காய்ச்சல் மற்ற நாடுகளுக்கு பரவாமல் இருப்பதற்காக விமான நிலையத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல இருக்கும் மக்கள் கண்டிப்பாக 10 நாட்களுக்கு முன்னரே மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
விமான நிலையத்தில் பயணிகள் தடுப்பூசி போட்டு உள்ளார்களா என்று கண்காணிக்க படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடுவதற்கு தமிழகத்தில் மூன்று இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் செவ்வாய், மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 – மதியம் 12 மணி வரையும், ராஜாஜி சாலையில் உள்ள துறைமுக சுகாதார நிறுவனத்தில் தங்கள் மற்றும் புதன் கிழமையும், தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு – தொழிலக பாதுகாப்பு இயக்ககம் அதிரடி உத்தரவு!
சென்னையில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மையங்கள்