ஏற்காட்டில் மலர்க்கண்காட்சி இன்று முதல் தொடக்கம். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கொடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் அப்போது ஏற்காட்டில் 47 மலர்க்கண்காட்சி இன்று முதல் தொடங்க உள்ளது. மேலும் இன்று தொடங்க உள்ள கோடைவிழாவானது வரும் 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் தொடந்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்காட்டில் மலர்க்கண்காட்சி இன்று முதல் தொடக்கம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஏற்காடு மலர் கண்காட்சி :
தற்போது ஏற்காட்டில் கோடைவிழா மற்றும் மலர்க்கண்காட்சி தொடங்கியுள்ள நிலையில் தோட்டக்கலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது நடைபெறும் மலர்க்கண்காட்சியில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உதகை மலை ரயில் சேவை இன்று தொடக்கம் – 4 நாட்களுக்கு பிறகு வந்த குட் நியூஸ் – சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரிப்பு!!
மேலும் இதன் காரணமாக ஏற்காட்டிற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகைதரக்கூடும் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அண்ணா பூங்கா மற்றும் படகு இல்லம் போன்ற இடங்களில் காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது