ஏற்காட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்து: சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்று மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய தனியார் பேருந்து 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் செல்லும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த தடுப்பில் மோதி 50 அடி பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்தது. மாலை நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் சிறுவன் உட்பட 7 பேர் பலியாகின. மேலும் 45 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்காட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்து
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது X வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார், ” அதில் நேற்று ஏற்பட்ட பேருந்து விபத்து மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனே, அம்மாவட்டத்தின் ஆட்சியரை தொடர்பு கொண்டு காயமடைந்த பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்ய உத்தரவிட்டேன்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் இந்த கோர சம்பவத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அரசு நிவாரண நிதி தேர்தல் அதிகாரிகளிடம் பரிந்துரைத்து தரப்படும் என்று பதிவிட்டுள்ளார். தற்போது முதல்வர் கொடைக்கானலுக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.