Home » பொது » 22 வயதில் IAS ஆன இளம் பெண்கள்.., முயற்சி திருவினையாக்கும் என்பது உண்மைதான் போல!!

22 வயதில் IAS ஆன இளம் பெண்கள்.., முயற்சி திருவினையாக்கும் என்பது உண்மைதான் போல!!

22 வயதில் IAS ஆன இளம் பெண்கள்.., முயற்சி திருவினையாக்கும் என்பது உண்மைதான் போல!!

இந்த உலகில் வெறும் 22 வயதில் IAS ஆன இளம் பெண்கள் பட்டியல் குறித்து சமூக வலைதளத்தில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் வாழும் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் வெறும் 22 வயதில் IAS(Indian Administrative Service) ஆன பெண்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

சுலோச்சனா மீனா:

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மாதோப்பூர் என்ற மாவட்டத்தில் பிறந்தவர் தான் இந்த சுலோச்சனா மீனா. இவர் படிப்பில் மேலோங்கி காணப்பட்டார். அதன்படி கடந்த 2021ம் ஆண்டு முதன் முதலாக IAS தேர்வை எழுதினார். அதில் ஆறாவது இடத்தை பிடித்தார். அப்போது அவருக்கு வயது 21 என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வாதி மீனா நாயக்:

ராஜஸ்தான் சிகார் பகுதியைச் சேர்ந்தவர் தான் ஸ்வாதி மீனா நாயக். இவர் கடந்த 2007 இல் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதி வெற்றி பெற்று, தனது முதல் முயற்சியிலேயே அகில இந்திய ரேங்க் (AIR) 260 ஐப் பெற்றார். மேலும் இந்த தேர்வை எழுதி பாஸ் செய்யும் பொழுது அவருக்கு வயது 21 என்பது குறிப்பிடத்தக்கது.

அனன்யா சிங்:

உத்தர பிரதேசம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் தான் அனன்யா சிங். அவர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தவர். கடந்த 2019ல் நடந்த யுபிஎஸ்சி தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று 51 வது ரேங்க் பெற்றார். அவருக்கு அப்பொழுது வயது 22 என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மிதா சபர்வால்:

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பெங்காலியை சேர்ந்தவர் தான் ஸ்மிதா சபர்வால். தனது படிப்பு மீது அதிக ஆர்வம் கட்டி வந்த இவர், யுபிஎஸ்சி தேர்வில் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு வயது 22.

இன்னும் இந்த லிஸ்டில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அண்மையில் ’12த் பெயில்’ என்ற திரைப்படம் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக விரும்புவோருக்கு உத்வேகம் தந்த படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

கடன் இல்லாமல் சொந்த வீடு கட்டணுமா? அப்ப உடனே இந்த ஐடியாவை Follow பண்ணுங்க!

பசு கிசான் கிரெடிட் கார்டு யோஜனா திட்டம்: கால்நடைகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் – விண்ணப்பிப்பது எப்படி?

பீமா சகி யோஜனா திட்டம்: பெண்களுக்கு மாதம் ரூ. 7000 உதவித்தொகை – மத்திய அரசின் அசத்தல் Scheme!

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம்: பெண்களுக்கு வட்டி மட்டும் ரூ.60,000!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top