யூடியூபில் இருந்து வீடியோக்கள் நீக்கம்
உலக அளவில் பெரும்பாலான மக்கள் யூடியூப்பில் தங்களது வீடியோக்களை பதிவிட்டு, அதன் மூலம் பணம் ஈட்டி வருகிறார். இதை பார்த்து ரசிப்பதற்கு பல யூசர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் ஒரு நல்லது இருந்தால் ஒரு கெட்டதும் இருக்கும் என்ற வசனத்திற்கு ஏற்ப சில முகம் சுளிக்கும் அருவருக்கத்தக்க வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இது மாதிரியான வீடியோக்களை கண்டறிந்து அழிக்கும் பணியில் தொடர்ந்து யூடியூப் நிறுவனம் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது யூடியூப் நிறுவனம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கிட்டத்தட்ட 3 மாதங்களில் 90 லட்சத்துக்கு மேற்பட்ட வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
குறிப்பாக நீக்கப்பட்ட வீடியோக்களில் இந்தியா தான் முதல் இடத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது, உலக அளவில் நீக்கப்பட்ட வீடியோக்களில் முதல் இடம் பிடித்த இந்தியா, 3 மாதங்களில் 22,54,902 இந்திய வீடியோக்கள் நீக்கப்பட்டு உள்ளது. 2வதாக சிங்கப்பூரிலிருந்து பதிவிடப்பட்ட 12,43,871 வீடியோக்களும், 3வதாக அமெரிக்காவிலிருந்து பதிவிடப்பட்ட 7.88 லட்சம் வீடியோக்களும். 4வது இடத்தில் இந்தோனேசியாவிலிருந்து 7.70 லட்சம் வீடியோக்களும் மற்றும் 5வது இடத்தில் ரஷ்யாவிலிருந்து பதிவிடப்பட்ட 5.16 லட்சம் வீடியோக்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு நாடுகளிலும் பதிவிடப்பட்ட வீடியோக்கள் அகற்றப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.