YouTube Premium சேவை கட்டணம் உயர்வு: இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக பெரும்பாலானோர் யூடியூப் சேனல் நடத்தி அதன் மூலம் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். குறிப்பாக அதன் மூலம் பணமும் சம்பாதித்து வருகின்றனர். இதனால் யூடியூப் பக்கம் தான் நாள் முழுவதும் மக்கள் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.
YouTube Premium சேவை கட்டணம் உயர்வு
இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு YouTube Premium யை அறிமுகப்படுத்தியது. அதன்படி Family Plan and Individual Plan என இரண்டாக பிரித்து மாதந்தோறும் ஒரு தொகையை கட்டி நாம் பார்த்து கொள்ளலாம். இதில் பெரும்பாலான மக்கள் Family Plan-யை தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக YouTube நிறுவனம், பிரீமியம் சேவையின் கட்டணத்தை உயர்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, ” Family Plan வாடிக்கையாளர்கள் இதற்கு முன்னர் மாதம் ரூ.189 சேவை கட்டணம் கட்டிய நிலையில் தற்போது சேவையின் கட்டணம் ரூ.299 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் Individual Plan வாடிக்கையாளர்கள் தனிநபர் பயன்பாட்டிற்கான பிரீமியம் சேவையின் கட்டணமும் ரூ.129-லிருந்து ரூ.149 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நீண்ட நாட்களாக இந்த சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: கங்கை ஆற்றில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து 3 பேர் பலி – தீராத செல்பி மோகத்தால் அனாமத்தா போன உயிர்கள்!!
கட்டண உயர்வுக்கு காரணம் என்ன?
YouTube சேவையின் மேம்பாடு மற்றும் புதிய அம்சங்களைச் சேர்ப்பதற்காக ஆகும் செலவுகளை ஈடு செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் இன்னும் அதிகாரபூர்வமான காரணம் வெளியிடாமல் இருந்து வருகிறது.
மேலும் YouTube Premium சேவையை தொடங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த கட்டண உயர்வு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி
விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்?
ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார்