பெண் யூடியூபர்
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் யூடியூப் மூலம் ஏகப்பட்ட பேர் வருமானம் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் யூடியூபர்கள் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு மக்களை கவர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் புட் ரீவியூ செய்யும் ஒரு பெண்ணை சென்னை போக்குவரத்து துறை அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை அண்ணா நகரில் இருக்கும் ஓர் ஹோட்டல் ஒன்றில் ‘ஃபுட் ரிவ்யூ’ செய்த வீடியோவை பெண் யூடியூபர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த வீடியோவில் அவர் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே ரிவ்யூ கொடுத்துள்ளார். மேலும் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கான நிலையில் ஒருவர் அந்த வீடியோவை சென்னை போக்குவரத்து துறை டாக் செய்து புகார் கொடுத்துள்ளார். அதாவது பெண் யூடியூபர் ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து காவல்துறை அந்த பெண்ணுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. மேலும் மக்களிடம் பேமஸான யூடியூபர்கள் இது போன்ற விதி மீறல்களை ஈடுபட கூடாது என்று தெரிவித்துள்ளது.