இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு!இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு!

யூடியூபர் இர்ஃபான் தன்னுடைய குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது தொடர்பான வீடியோ ஒன்றை அவருடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து அந்த புகாரில் மருத்துவர் நிவேதிதா மற்றும் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டது.

பிரபல யூடியூபர் இர்ஃபான் அண்மையில் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டிற்கு சென்று சட்டவிரோதமாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்திற்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியதோடு அந்த வீடியோவும் இர்ஃபான் யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது யூடியூபர் இர்ஃபான் தன்னுடைய குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது தொடர்பான வீடியோ ஒன்றை அவருடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இர்ஃபான் வெளியிட்ட வீடியோ தொடர்பாக இளங்கோவன் என்பவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளார்.

தீபாவளிக்கு 14016 சிறப்பு பேருந்துகள் 2024 – எந்த பகுதிகளுக்கு தெரியுமா? – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

இதனையடுத்து அந்த புகாரில் மருத்துவர் நிவேதிதா மற்றும் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த புகாரின் அடிப்படையில் இர்ஃபானின் மனைவி தொடர்பான மருத்துவ ஆவணங்களைக் கைப்பற்றி தற்போது செம்மஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தொப்புள் கொடி வெட்டும் வீடியோவை இர்ஃபான் தனது வலையொலி பக்கத்தில் இருந்து நீக்கினார். இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். அனால் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மதுரை மாவட்டத்தில் அளித்த பேட்டியில் இர்ஃபான் சர்ச்சை வீடியோ விவகாரத்தில் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம். சட்டப்படியும் துறை வாயிலாகவும் நடவடிக்கை தொடரும் என்று அவர் அளித்த பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *