
தளபதியின் GOAT
தென்னிந்திய தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக இருந்து வருபவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்(GOAT) என்ற படத்தில் நடித்து வருகிறார். டைம் ட்ராவல் சம்பந்தமான படத்தோட கதை இருப்பதால் ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஸ்கிரீனில் விசுவல் ட்ரீட் கண்டிப்பாக இருக்கும் என்று படத்தோட இயக்குனர் தெரிவித்திருந்தார். மேலும் படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் படம் இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதுமட்டுமின்றி பல வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா விஜய்யுடன் பயணிக்கிறார் என்பதால் பாட்டு எல்லாம் தாறுமாறாக இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் யுவன் கோட் படத்தை குறித்து ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார். அதாவது கோட் படத்தில் தளபதி விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக கூறியுள்ளார். யுவன் இசையில் விஜய் பாடியது இதுவே முதல் முறை. அதனால் படத்தோட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. மேலும் தளபதி 69 படத்துடன் விஜய் சினிமாவை விட்டு விலக போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.