Home » செய்திகள் » பயோபிக் படத்தை இயக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரர்.., சினிமாவிலும் ஆல்ரவுண்டர் ஆவாரா?

பயோபிக் படத்தை இயக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரர்.., சினிமாவிலும் ஆல்ரவுண்டர் ஆவாரா?

பயோபிக் படத்தை இயக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரர்.., சினிமாவிலும் ஆல்ரவுண்டர் ஆவாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் வீரர் தன்னுடைய X வலைதள பக்கத்தில் இன்ப அதிர்ச்சி தரும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக தற்போது வரை இருந்து வருபவர் தான் யுவராஜ் சிங்.  ஆல் ரவுண்டராக கலக்கி வந்த இவர் கடந்த 2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை ஆடி வெற்றிக்கு வழிவகுத்தார். அப்போது அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட நிலையில் இந்தியாவிற்காக விளையாடி தொடர் நாயகன் என்ற விருதையும் பெற்றார். தற்போது எல்லா போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று கொண்டு சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் கிரிக்கெட் தொடர்பாக பல கருத்துக்களை தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அவர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ” நான் ஒரு படத்தை இயக்கப் போகிறேன். அதில் நானே நடிகன், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளர் என ஆல் இன் ஆலாக இருந்து என்னுடைய கிரிக்கெட் பயணத்தை மையமாக வைத்து எடுக்க போகிறேன். இந்த பணிகளில் ஓரிரு ஆண்டுகளில் தொடங்கிவிடும். எனக்கு வாழ்த்துக்கள் கூறுங்கள் ரசிகர்களே. விரைவில் பெரிய திரையில் உங்களை சந்திக்க இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் சந்தோஷமாக இருந்து வருகின்றனர். ஒரு பக்கம் நெட்டிசன்கள் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மக்களே.., சோலி முடிய போகுது.., இந்த 20 நாட்களில் வெளியே வராதீங்க.. வானிலை மையம் எச்சரிக்கை!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top