Cricket king தோனியை தொடர்ந்து பயோ பிக் படமாக உருவாகும் முன்னாள் வீரர் வாழ்க்கை வரலாறு: கடந்த சில வருடங்களாக ஏதாவது சாதனை செய்தவர்களின் வரலாறு கதையை பயோ பிக் படமாக வெளியாகி வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் தற்போது ஒரு பிரபலத்தின் பயோ பிக் படம் தற்போது உருவாக இருக்கிறது. அதாவது, கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், 2011ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையை வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவரும், கடந்த 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்த போது யுவராஜ் சிங்கின் புகழ் உச்சத்தை தொட்ட யுவராஜ் சிங்கின் வரலாறு கதை தான் படமாக உருவாக உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
இதை யுவராஜ் சிங்கின் தந்தையான யோகராஜ் சிங் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ” என்னுடைய மகனின் வரலாற்று கதையில் உருவாகும் இந்த படத்திற்கு ‘தி மேன் ஆப் தி லாங்கஸ்ட் ஹவர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் எனக்கும் என் மகனுக்கு உள்ள உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த படத்தோட டைட்டிலை என்னுடைய மகன் தான் கூறினார் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம் 2024ல் எது தெரியுமா? ஆப்பிளுக்கே ஆப்பு வச்சுட்டாரே?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலி
இந்திய கிரிக்கெட் அணியின் Fielding Coach ஆக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர்?
மனிதர்களை வைத்து மனித கழிவுகளை சுத்தம் செய்தால் சிறை தண்டனை
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியீடு