Zika virus வீரியம் பிடிக்கும் ஜிகா வைரஸ்: உலக நாடுகளில் கடந்த சில வருடங்களாக கொரோனா தொற்று உலுக்கி வந்த நிலையில் இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் பழைய நிலைமைக்கு திரும்புகிறது. இப்படி இருக்கையில் தற்போது மீண்டும் ஒரு நோய் பரவ தொடங்கியுள்ளது. அதாவது, மஹாராஷ்டிர மாநிலத்தில் ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
வீரியம் பிடிக்கும் ஜிகா வைரஸ்
இந்நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மஹாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து ஜிகா வைரஸ் பரவி வருவதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் படி, இந்த ஜிகா வைரஸ் ஒரு மனிதனுக்கு பரவினால் தோலில் தடிப்புகள், காய்ச்சல், மூட்டு வலி, தலைவலி ஆகியவை நீண்ட காலத்திற்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெளிவாக சொல்ல போனால் 102°F (38.9°C) காய்ச்சல் இருக்கும். அதுமட்டுமின்றி உடலில் சிவப்பு நிற தடிப்புகள் ஏற்படும். குறிப்பாக முகம் மற்றும் உடலில் மற்ற பகுதிகளிலும் முக்கியமாக பரவும். அதிகமாக அரிப்புடன் கூடிய தடிப்புகள் ஏற்படும்.
Also Virus: KOO செயலியை நிரந்தரமாக Close செய்ய முடிவு – நிதி நெருக்கடி காரணமாக END CARD போட்ட நிறுவனம்!
அதுமட்டுமின்றி கை, கால், விரல்கள், மற்றும் மூட்டுப் பகுதிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இரண்டு கண்களின் நிறம் சிவப்பு அல்லது பிங்க் நிறமாக மாறும், தசை வலி உண்டாகும். மேலும் உடல் சோர்வு, வயிற்று வலி, வாந்தி அல்லது கண்களில் வலி இருக்கும். எனவே மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.