Breaking news: உணவு பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் ZOMATO SWIGGY: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் சாப்பிடும் பழக்கத்தை வைத்துள்ளனர். தினசரி ஒரு ஆர்டர் போடவில்லை என்றால் தூக்கமே வராது என்ற அளவுக்கு இருந்து வருகின்றனர்.
உணவு பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் ZOMATO SWIGGY
இதனால் ZOMATO மற்றும் SWIGGY போன்ற உணவு டெலிவரி செய்யும் ஆப்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த இரு நிறுவனமும் உலகின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த நிறுவனத்தில் கல்லூரி மாணவர்கள் முதல் 50 வயதான பெரியவர்கள் வரை வேலை பார்த்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி டெல்லி, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் தான் ZOMATO மற்றும் SWIGGY தான் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் உணவு பிரியர்களுக்கு ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, டெலிவரி நிறுவனங்களான ZOMATO மற்றும் SWIGGY தங்களுடைய பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 20% உயர்த்தியுள்ளது.
Also Read: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம் – ஒரு தொழிலதிபரின் விருப்பப்படி நடந்ததா? – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அதன்படி இதுவரை ரூ.5 ஆக இருந்த பிளாட் ஃபார்ம் கட்டணம், தற்போது ரூ.6 ஆக உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு டெல்லி, பெங்களூருவில் அமலுக்கு வந்துள்ள நிலையில், விரைவில் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளதாக டெலிவரி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதிப்போட்டி
சோமாலியாவில் குண்டு வெடிப்பால் 5 பேர் பலி
தமிழகத்தில் இனி இந்த பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்
உலகத்திலேயே பிரதமர் மோடி தான் பர்ஸ்ட்