சொமேட்டோ வாபஸ்
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து உணவுகளை வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ‘Pure Veg Mode’ என்ற சேவையை அறிவித்திருந்தது. இந்த சேவை மூலம் சைவ உணவு பிரியர்கள் பயனடைவார்கள் என தெரிவித்திருந்தது. அதற்காக ஊழியர்களுக்கு பச்சை நிறம் ஆடை மற்றும் பச்சை நிறம் பை வழங்கப்பட்டுள்ளது. இதை சிலர் வரவேற்றாலும், பெரும்பாலானோர் பச்சை நிற ஆடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

சொல்ல போனால் பலரும் சொமேட்டோ ஆப்பை அன் இன்ஸ்டால் செய்து அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தனர். இப்படி எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் கூறியிருப்பதாவது, ” சுத்த சைவ உணவு விரும்பிகளுக்காக நாங்கள் தனியாக குழுக்களை பயன்படுத்தும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பச்சை நிற ஆடையை மாற்ற முடிவு செய்திருக்கிறோம். எனவே தற்போது டெலிவரி ஊழியர்கள் பயன்படுத்தும் சிவப்பு நிற ஆடைகளையே அவர்களும் பயன்படுத்துவார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.